முகுட்பந்தன்-சைத்யா அல்லது முக்தா-பந்தன் விஹார் என்றும் பழமையான பௌத்த மத எழுத்துருக்களில் அழைக்கப்படும் ராமாபார் ஸ்தூபி, நிர்வாணா கோவிலிருந்து கிட்டத்தட்ட 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த ஸ்தூபி அமைந்துள்ள இடம் உலகம் முழுவதுமுள்ள பௌத்த புனிதப்பயணிகளின் போற்றுதலுக்குரிய இடமாகும். கி.மு. 483-ல் புத்தர் இறந்த பிறகு, இந்த இடத்தில் தான் புத்தர் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
பௌத்த மத பதிவேடுகளின் படி, புத்தரின் வாழ்நாளிலேயே மல்லர்களால் இந்த ஸ்தூபி கட்டப்பட்டதாக சொல்லப் படுகிறது. இந்த ஸ்தூபியின் கட்டிடக்கலை அதன் பழமையான வரலாற்றுப் பின்னணியை நினைவுபடுத்துவதாக உள்ளது.
குசிநகரம்-தீயோரியா சாலையில் உள்ள ஒரு மேட்டில் இந்த ஸ்தூபி கட்டப்பட்டுள்ளது. 47.24 மீ அகலமான அடித்தளத்தில் 14.9 மீ உயரத்திற்கு இந்த ஸ்தூபி கட்டப்பட்டுள்ளது.
அதன் மேளம் போன்ற மேற்பகுதி சுமார் 34.14 மீ விட்டம் அளவுடையதாக உள்ளது. இது நெல், கரும்பு மற்றும் கோதுமை விளையும் விவசாய நிலத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தூபி இருக்குமிடத்திற்கு அருகில் ஏரியைப் போன்ற ஒரு நீர்நிலையும் உள்ளது.



Click it and Unblock the Notifications