பாட்ராவ்னா – தாம்குஹி சாலையின் 4வது கிலோமீட்டரில் உள்ள சித்தாநாத் என்ற இடத்தில் உள்ள சிதுவா அஸ்தான் என்ற இந்த இடம், துறவிகள் தங்களுடைய மதம் அல்லது தெய்வீக தேடல்களைக் கடந்து ஞானம் அல்லது சித்தியடைந்த இடமாக கருதப்படுகிறது.
சிதுவா அஸ்தான் கோவிலின் பெயர் அந்த கோவிலில் கடவுளாக வைத்து வழிபடப்படும் சித்தாநாத் ஜி-யின் பெயராலேயே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த அஸ்தானில் அனுமான், துர்கா தேவி, ஒரு தூனி மற்றும் ஹவான் என்ற புனித தீயினால் செய்யப்படும் யாகங்கள் செய்யும் ஒரு யாகசாலை ஆகியவை உள்ளன.
மேலும் பல்கன் மாதத்தின் 13-ம் நாள் மற்றும் தீபாவளியின் 2-ம் நாளில் நடக்கும், ஒரு நாள் திருவிழாவின் போது இந்த கோவில் பெருமளவிலான பக்தர்களை கவர்ந்திழுக்கும் இடமாக கருதப்படுகிறது. இந்த கோவில் காலை 4 மணியிலிருந்து இவு 9 மணி வரையிலும் பக்தர்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications