லக்ஷ்வதீப்பில் நாம் எதை எதிர்பார்த்து செல்கிறோமோ அவை யாவுமே இந்த அமினி தீவில் நமக்காக காத்திருக்கின்றன. அதாவது இயற்கை துணையிருக்க தனிமையும் மற்றும் நிசப்தமும். முட்டை வடிவத்தில் சிறியதாக காட்சியளிக்கும் இந்த தீவு வெறும் 3 கி.மீ நீளம் மற்றும் 1 கி.மீ அகலம் மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்வதீப் பகுதியில் முஸ்லிம் மார்க்கத்தை பரப்பிய ஞானி உபயதுல்லா இந்த அமினி தீவினை புகழ் பெறச்செய்துள்ளார். சூரிய அஸ்தமனக்காட்சிகளை கண்டு களிப்பதற்காக இந்த தீவிலுள்ள ரிசார்ட் விடுதிகள் செயற்கை மரப்பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்ட காட்சி தளங்களை அழகாக நிர்மாணித்துள்ளன. இவற்றில் அமர்ந்தபடி சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
அகத்தி தீவிலிருந்து வாடகைப்படகில் இந்த அமினி தீவுக்கு வந்து சேரலாம். இந்தியாவின் மேற்குக்கடற்கரைப்பகுதியோடு படகு போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கும் அகத்தி தீவில் லட்சத்தீவு பகுதிக்கான உள்நாட்டு விமான நிலையமும் உள்ளது.