India
Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்ஷ்வதீப் » ஈர்க்கும் இடங்கள் » அகத்தி தீவு

அகத்தி தீவு, லக்ஷ்வதீப்

30

லக்ஷ்வதீப் பகுதியின் நுழைவாயில் என்று அறியப்படும் இந்த அகத்தி தீவிற்கு எப்படியும் நீங்கள் விஜயம் செய்தே ஆக வேண்டியிருக்கும். ஏனெனில் இந்திய நிலப்பகுதியிலிருந்து வரும் சொகுசுப்படகுகள் யாவற்றுக்குமான துறைமுகம் இந்த தீவில்தான் உள்ள்து.

மேலும், லக்ஷ்வதீப் பகுதிக்கான உள்நாட்டு விமான நிலையமும் இந்த தீவில்தான் உள்ள்து. கொச்சி மற்றும் பெங்களூர் நகரத்திலிருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் இங்கு வருகை தருகின்றன.

இருப்பினும் 4 ச.கி.மீ பரப்பளைவை மட்டுமே கொண்டுள்ள இந்த தீவில் இரண்டு ரிசார்ட் விடுதிகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தீவுப்பகுதியின் பல இடங்களை குறுகிய சாலைகள் இணைக்கின்றன. வாடகை சைக்கிள் மூலம் இந்த தீவுப்பகுதியை பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்.

தீவில் கால் வைத்தவுடனேயே உங்களை தனது மாசு மருவற்ற இயற்கை வனப்பின்மூலம் இந்த தீவு மயக்கி விடுகிறது. அதற்கப்புறம் ஏதோ ஒரு உல்லாச பரவசம் உங்களை ஆட்கொள்வதை உணர்வீர்கள். அகத்தி மற்றும் லக்ஷ்வதீப் சமீப காலமாக கோடை சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கபுரியாக பிரசித்தமடையத் துவங்கியுள்ளன.

எந்த வித வணிக சந்தடிகளும் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கையின் தூய்மை மட்டுமே மிளிரும் இந்த தீவுக்கூட்டம் தற்கால நாகரிக தலைமுறையினரை பெரிதும் கவர்ந்திருப்பதில் வியப்பில்லை.

வெண்ணிறப்பரப்போடு காட்சியளிக்கும் கடற்கரைகளும், ஸ்படிகம் போன்று தூய்மையுடன் தீவுகளைச்சுற்றிலும் இள நீல நிறத்தில் மின்னும் தரைக்கடல் பகுதிகளும் நம்மை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன.

ஹாலிவுட் படங்களில் மற்றுமே பார்த்திருக்கக்கூடிய, சிக்கலான பெயர்களுடன் உலகில் எங்கெங்கோ இருப்பதாக கேள்விப்பட்டிருந்த அழகுத்தீவுகள் போன்று நம் இந்திய துணைக்கண்டத்திலேயே - அதுவும் கேரளக்கடற்கரைக்கு வெகு அருகிலேயே - அமைந்திருக்கும் உண்மை உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

கொச்சியிலிருந்து 200 கி.மீ தூர படகுப்பயணத்தின் முடிவில் இந்த சொர்க்கத்தீவை தரிசிக்கும்போது உங்கள் கண்கள் காணும் காட்சியை ஓப்புக்கொள்ளவே கொஞ்ச நேரம் பிடிக்கலாம் உங்களுக்கு!

அகத்தி தீவில் பலவிதமான ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நார்க்கெலிங் பொழுது போக்கு அம்சங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. இவை யாவுமே சிக்கனமான பொழுதுபோக்கு அம்சங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீன்பிடித்தல் இங்கு மற்றொரு முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாகும்.

கண்ணாடி அடித்தளத்தை கொண்டிருக்கும் படகுகளில் சவாரி செய்து விதவிதமான பவளப்பாறை அமைப்புகளையும் பார்த்து ரசிக்க மறக்க வேண்டாம். அகத்தி நிர்வாகமானது தங்கள் தீவுப்பகுதி ஒரு சுற்றுலாத்தலமாக மாறிவிட்ட நடைமுறை உண்மைக்கு இன்னும் முற்றிலும் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும், சுற்றுலாச் செயல்பாடுகளுக்கான பொதுவான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்து கொடுக்கின்றனர்.

ஒரு பெரிய மீனை நீங்கள் பிடித்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம் - உடனே அதை சமைத்து சாப்பிடுவதற்கான ‘பார்பிக்யூ’ ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிடுகின்றனர்.

அகத்தி தீவின் உள்ளூர் சுவைகளை ருசி பார்க்கவும் மறந்துவிடாதீர்கள். இந்த தீவின் கடலுணவுத் தயாரிப்புகள் தனித்தன்மையான சுவையை கொண்டுள்ளன. மேலும் உலகிலேயே ‘ட்யூனா’ மீன் அதிகம் பிடிபடும் இடம் இந்த அகத்தி தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

தீவின் சூழல் தூய்மை போன்றவற்றை தக்கவைப்பதற்காக இந்த தீவில் மது அருந்த அனுமதிக்கப்படுவதில்லை என்ற நடைமுறை உங்களுக்கு ஒருவேளை வருத்தத்தை தரலாம் அல்லது மகிழ்ச்சியையும் தரலாம். அகத்தி தீவிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பங்காரம் தீவில் மது அருந்தி மகிழ அனுமதி உண்டு என்பது கூடுதல் தகவல்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Aug,Thu
Return On
12 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
11 Aug,Thu
Check Out
12 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
11 Aug,Thu
Return On
12 Aug,Fri

Near by City