Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்ஷ்வதீப் » ஈர்க்கும் இடங்கள் » கல்பேணி தீவு

கல்பேணி தீவு, லக்ஷ்வதீப்

30

கொச்சியிலிருந்து 150 மை தூரத்தில் இந்த கல்பேணி எனும் சிறு தீவு அமைந்துள்ளது. இது வெறும் 2.8 ச.கி.மீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. வடக்கும் தெற்குமாக வீற்றுள்ள இந்த தீவு தனது 2.8 கி.மீ நீள தரைக்கடல் பகுதிக்காக பிரசித்தி பெற்றுள்ளது.

தரைக்கடல் என்பது கடற்கரையை ஒட்டி ஆழம் குறைவான அலைகள் அற்ற ஸ்படிகம் போன்ற தூய நீருடன் காட்சியளிக்கும் கடல் நீர்ப்பரப்பாகும். நிலப்பகுதியில் இதுபோன்ற கடற்கரைகளை காணமுடியாது என்பதால் இது ஒரு வித்தியாசமான இயற்கை எழில் அம்சமாகும்.

கல்பேணி தீவில் டிப் பீச் எனபடும் ஆழமற்ற மரகதப்பச்சை தரைக்கடல் பகுதி காணப்படுகிறது. இது கடல் குளியல் மற்றும் ஸ்நார்க்கலிங் போன்ற பொழுதுபோக்குகளுக்கு மிகவும் ஏற்ற கடற்கரைப்பகுதியாகும்.

தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ளதால் இந்த கடற்கரைக்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது (டிப்=முனை) . மிதவைப்படகு சவாரி மற்றும் பவழப்பாறை வேடிக்கை போன்றவையும் இங்கு முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களாகும். திலக்கம், பிட்டி மற்றும் செரியம்ஆகிய மூன்று தீவுகள் சேர்ந்தே கல்பேணி தீவு என்று அழைக்கப்படுகிறது.

இந்த தீவுப்பகுதியில் 37 மீட்டர் உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட கலங்கரை விளக்கமும் உள்ளது. இதன் உச்சிக்கு ஏறி மேலிருந்து இந்த கல்பேணி தீவின் இயற்கை அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

இங்குள்ள தங்கும் காட்டேஜ் வீடுகள் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளன. (இரண்டு வெவ்வேறு விருந்தினர் வாடகைக்கு எடுக்கும்படியாக). கல்பேணி தீவிற்கு செல்வது மிகவும் எளிதாகவே உள்ளது. இந்தியாவின் மேற்குக்கடற்கரையிலுள்ள கொச்சியிலிருந்து இந்த தீவிற்கு நேரடி சொகுசுப்படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu

Near by City