Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்ஷ்வதீப் » ஈர்க்கும் இடங்கள் » பங்காரம்

பங்காரம், லக்ஷ்வதீப்

30

பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளின் அபிப்ராயப்படி, இந்த பங்காரம் தீவு தேனிலவு தம்பதியர்களுக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் லக்ஷ்வதீப் பகுதியின் மற்ற தீவுகளில் இல்லாத ஏராளமான அம்சங்கள் இந்த தீவில் நிறைந்துள்ளன. விமான நிலையம் அமைந்திருக்கும் அகத்தி தீவுக்கு அருகிலேயே இந்த பங்காரம் தீவு அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்ல வசதிகளை கொண்டிருக்கும் 60 சொகுசு தங்கும் வீடுகள் (காட்டேஜ்) இந்த தீவில் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைக்கு அருகிலேயே இந்த தங்கும் வீடுகள் அமைந்துள்ளதால் நம் விருப்பம்போல் சில நாட்களுக்கு தங்கி சுற்றுலாவை ஆனந்தமாக அனுபவிக்கலாம்.

இந்த தங்கும் வீடுகளுக்கென்றே பிரத்யேக உணவு விடுதியும் இணைக்கப்பட்டிருப்பதால் வேண்டிய உள்ளூர் உணவு வகைகளை தருவித்து ருசி பார்க்கவும் வசதியாக உள்ளது.

பங்காரம் தீவில் பலவித கடல் வாழ் உயிரினங்களோடு நிலப்பகுதி உயிரினங்களும் பயணிகளை வசீகரிக்கின்றன. பலவகை மீன்கள், கிளிகள், முள்ளம்பன்றி, பலவகைப்பறவைகள் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இந்த தீவுப்பகுதியில் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நார்க்கெலிங் போன்ற கடல் மூழ்கு நீச்சலில் ஈடுபட்டு நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள் மற்றும் பவளப்பாறை அமைப்புகளை பார்த்து ரசிக்கலாம்.

அனுபவம் உள்ள சாகச நீர் மூழ்கிகள் முதல், அனுவம் இல்லாத - ‘டைவிங்’ என்றால் என்னவென்றே தெரியாத - புதியவர்கள் வரை யாவருக்கும் ஏற்ற கடற்பகுதிகள் இங்கு வசதியாக அமைந்துள்ளன.

கடற்கரைக்காட்சிகள் அலுக்க தொடங்கினால் இந்த தீவுப்பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் இயற்கையை ரசித்தபடியே உலாப்போகலாம். BIS என்று அழைக்கப்படும்

‘பங்காரம் ஐலேண்ட் ரிசார்ட்’ விடுதி இங்கு கடற்கரையிலேயே தொங்கு ஊஞ்சல், குடில்கள் மற்றும் வெயிற்குடைகள் போன்றவற்றை அமைத்துள்ளது. பிடித்த புத்தகத்தோடு அமர்ந்துவிட்டால் உல்லாசமாகவும் பொழுதைக்கழிக்கலாம் அல்லது உங்களின் முக்கியமான அலுவல்களிலும் ஈடுபடலாம்.

அது சினிமா திரைக்கதை எழுதுவதாக இருந்தாலும் சரி, சுயசரிதை எழுதுவதாக இருந்தாலும் சரி. எல்லாவற்றுக்கும் மேலாக லக்ஷ்வதீப் பகுதியில் மதுவுக்கு அனுமதி வழங்கப்படும் ஒரே தீவு இந்த பங்காரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் அளவுக்கு மிஞ்சாத நிதானத்துடன் இது போன்ற சந்தோஷங்களில் பயணிகள் ஈடுபடுவது சிறந்தது. ஏனெனில் தீவுப்பகுதியின் தூய்மை மற்றும் சிக்கல் அல்லாத சூழலை பேணிக்காப்பதில் தீவு நிர்வாகம் மிகுந்த அக்கறை காட்டுகிறது.

பங்காரம் தீவுக்கு விஜயம் செய்வது மிக எளிதாகவே உள்ளது. அகத்தி தீவுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து படகு மூலம் இந்த பங்காரம் தீவினை வந்தடையலாம். கொச்சியிலிருந்து பங்காரம் தீவுக்கு நேரடி சொகுசு படகு சேவைகளும் இயக்கப்படுகின்றன. அகத்தியிலிருந்து பங்காரம் தீவுக்கு ஹெலிகாப்டர் சேவையும் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri

Near by City