புல்லா டால், லாண்ஸ்டவுனின் குதூகலம் நிரம்பிய, முக்கியமன சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட, செயற்கையாக உருவாக்கப்பட்ட, அழகான ஏரியாகும்.
கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்கள், புல்லா டால், கட்டுமானத்தின் போது உதவியதால், இது அவர்களுக்காக, ஒதுக்கப்பட்டது. இந்த ஏரியின் பெயரான புல்லா என்பது ஒரு கார்வாலி வார்த்தையாகும்.
இதற்கு 'தம்பி' என்று பொருள். இந்த ஏரியில் பயணிகளுக்கான படகு சவாரி வசதிகள் உள்ளன. இந்த ஏரியில், சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்கள், மற்றும் அழகான நீரூற்றுகள் ஆகியன உள்ளன.



Click it and Unblock the Notifications