Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாண்ஸ்டவுன் » ஈர்க்கும் இடங்கள் » கன்வ ஆஸ்ரமம்

கன்வ ஆஸ்ரமம், லாண்ஸ்டவுன்

21

லாண்ஸ்டவுனின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகிய, கன்வ ஆஸ்ரமம், பச்சைப்பசேல் காடுகள் மற்றும் குன்றுகளின் மத்தியில் அமைந்துள்ளது. இவ்வாஸ்ரமத்தின் அழகை அதிகரிக்கும் மாலினி நதி, ஆஸ்ரமத்திற்கு மிக அருகில் பாய்ந்து ஓடுகிறது.

இது தியானம் புரிய ஒரு சிறந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு பக்தர்கள் தங்க வசதியான விடுதிகள் உள்ளன. மேலும் `ஸகஸ்தரதாரா' நீர்வீழ்ச்சி எனும் அழகிய நீர்வீழ்ச்சி ஆஸ்ரமத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

இந்து புராண கதைகளின் படி, பிரபல  ராஜரிஷி,  விஸ்வாமித்திரர் இந்த இடத்தில் தவம் புரிந்தார். அவரின் கடுந்தவம் சொர்கத்தின் அரசன் இந்திரனை பயத்தில் ஆழ்தியது. எனவே இந்திரன், விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க, மேனகை என்கிற தெய்வீக கன்னியை அனுப்பினான்.

மேனகையும்  விஸ்வாமித்திரரின் மோகத்தை தூண்டி தவத்தை கலைத்தாள். இருவரது மோகத்தின் விளைவாக அவர்களுக்கு, சகுந்தலா என்கிற அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், மேனகா, இந்த ஆசிரமத்தில் இருந்த கன்வ முனிவரிடம் குழந்தையை  ஒப்படைத்து விட்டு சொர்கலோகம் சென்று விட்டாள். 

சகுந்தலா இந்த ஆஸ்ரமத்தில் வளர்ந்து, ஹஸ்தினாபுர அரசர் துஷ்யந்தனை திருமணம் செய்து கொண்டாள். சில ஆண்டுகளுக்கு பிறகு, அவளுக்கு  ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பரதன் பெயரிடப்பட்டது. இந்த பரதனின் நினைவாகவே இந்தியா, பாரதம் அல்லது பரதவர்ஷம் என குறிப்பிடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed