லாண்ஸ்டவுனில் உள்ள தாருகேஷ்வர மஹாதேவ ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. இது கடல் மட்டத்திலிருந்து 2092 மீ உயரத்தில் உள்ள ஒரு மலைஉச்சியின் மீது அமைந்துள்ளது.
இப்புகழ் பெற்ற சிவாலயத்திற்கு, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். பக்தர்கள், இவ்வாலயத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள், கண்டிப்பாக நிறைவேறும் என்று நம்புகின்றனர்.
மஹாசிவராத்ரி இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான விழாவாகும். இக்கோவில் வளாகம் பச்சைப்பசேலான பைன், ஓக், மற்றும் தேவதாரு மரங்களால் சூழப்பட்டுள்ளது. இங்கு பல சிறிய தொடர்ச்சியான நீர் பாயும் குளங்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications