Search
  • Follow NativePlanet
Share

லொனார் - உலகின் மூன்றாவது பெரிய விண்கல் பள்ளம்

10

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் உள்ள புல்தானா மாவட்டத்தில், லொனார் நகரம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய நகரம் மும்பையிலிருந்து 483 கிலோமீட்டர் தொலைவிலும், ஔரங்கபாத்திலிருந்து 148 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

லொனார் நகரம் பிளெய்ஸ்டொகீன் சகாப்தத்தின் காலகட்டத்தில் பூமியை தாக்கியதால் ஏற்பட்ட மிகப்பெரிய விண்கல் பள்ளத்துக்காக மிகவும் புகழ்பெற்றது. அந்த மிகப்பெரிய விண்கல் 52,000 ஆண்டுகளுக்கு முன்பு லொனார் நகரில் வந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்பு, தற்போது இந்த விண்கல் பள்ளம் ஏரியாக மாற்றமடைந்து லொனார் ஏரி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

லொனார் ஏரி 4000 அடி விட்டமும், 450 அடி ஆழமும் கொண்டது. இந்த சரித்திர புகழ்பெற்ற விண்கல் பள்ளம் ஜே.ஈ.அலெக்ஸாண்டர் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி பத்ம புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் ஐனா-ஐ-அக்பரி போன்ற வேத சாஸ்திர நூல்களில் குறிப்புகள் உள்ளன.

லொனார் ஏரிக்கு பின்னால் தைத்யா சுடன் என்ற தொன்மையான கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான  புனித யாத்ரிகர்கள் ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்வர்.

லொனாரின் விண்கல் பள்ளம் ஒரு அறிவியல் அற்புதம். இதை நேரடியாக பார்த்தாலொழிய எவரும் எளிதில் நம்ப மாட்டர்கள். அப்படி நீங்கள் இந்த பள்ளத்தை நேரில் பார்க்கும் போது 50,000 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று,  இறந்த காலத்தில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படும். அப்போது எல்லோரும், எப்பேர்பட்ட பிரபஞ்சத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை பெருமையோடு நினைவு கூர்வர்.

லொனார் சிறப்பு

லொனார் வானிலை

சிறந்த காலநிலை லொனார்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது லொனார்

  • சாலை வழியாக
    லொனாருக்கு பேருந்து மூலம் வருவதற்கு முதலில் ஔரங்கபாத் வந்து, பின்பு அங்கிருந்து மாநகரப் பேருந்துகளில் லொனாரை அடையவேண்டும். மகாராஷ்டிராவின் பெருநகரங்களான மும்பை, பூனே உள்ளிட்ட இடங்களிலிருந்து ஏராளமான அரசுப் பேருந்துகள் ஔரங்கபாத்துக்கு இயக்கப்படுகின்றன. மும்பை மற்றும் பூனேவிலிருந்து, லொனார் வந்து சேர கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    லொனாரிலிருந்து ஔரங்கபாத் ரயில் நிலையம் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு லொனாரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்னா ரயில் நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    லொனாரிலிருந்து ஔரங்கபாத் விமான நிலையம் 143 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல் மும்பை சத்ரபதி பன்னாட்டு விமான நிலையமும் லொனாருக்கு அருகில் இருக்கிறது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எந்த சிரமமுமின்றி லொனாரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed