Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க்

பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க், லக்னோ

59

பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க் எனும் இந்த பூங்கா ஆவாத் வம்சத்தின் கடைசி நவாப்பான வாஜித் அலி ஷா’வால் அவரது மனைவியின் நினைவாக கட்டப்பட்டு அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இது நகர மையப்பகுதியில் ஹோட்டல் கிளார்க்ஸ் ஆவாத் எனும் ஹோட்டலுக்கு அருகில் அமைந்துள்ளது.

தனது கணவரை ஆங்கிலேயர்கள்  கல்கத்தாவில் காவலில் வைத்தபின்னர் இந்த பேகம் ராணி லக்னோ நகர ஆட்சிப்பொறுப்பில் ஈடுபட்டிருந்தார். துணிச்சலாக ஆங்கிலேயர்களை எதிர்த்த இவர் அவர்களை வெல்ல முடியாமல் நேபாள நாட்டில் தஞ்சம் புகுந்து அங்கேயே 1879ம் ஆண்டில் காலமானார்.

சுதந்திரத்திற்கு பிறகு உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்தால் இந்த ராணிக்காக ஒரு நினைவகம் கட்டப்பட்டு 1962ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த நினைவகத்தில் ஒரு சலைவைக்கல்லான ஆன கல்வெட்டு அமைக்கப்பட்டு சுற்றிலும் பித்தளையால் ஆன பட்டயங்கள்  மற்றும் ஆவாத் வம்ச சின்னங்கள் காணப்படுகின்றன.

இந்த பூங்கா தற்போது காலை நடைப்பயணம் மேற்கொள்வோருக்கு உகந்த ஸ்தலமாக மாறியுள்ளது. அற்புதமாக பராமரிக்கப்பட்டு வரும் புல் தரைகள் சலவைக்கல்லால் ஆன நடைபாதைகளோடு இங்கு காட்சியளிக்கின்றன.

மாலை நேரத்தில் இங்குள்ள நீருற்றுகளில் நீர் பீய்ச்சிடும் காட்சி வண்ண விளக்குகளின் பின்னணியில் மனதை லேசாக்கும் விதத்தில் உள்ளது. செயற்கை ஓடைகள் மற்றும் தடாகங்களும் கண்ணைக்கவரும் வகையில் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
03 Apr,Fri
Check Out
04 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat