Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » சத்தர் மன்ஸில்

சத்தர் மன்ஸில், லக்னோ

59

சத்தர் மன்ஸில் அல்லது குடை அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த மாளிகையின் உச்சியில் முலாம் பூசப்பட்டுள்ள ஒரு குடையமைப்பு உள்ளதால் இந்த பெயர் வந்துள்ளது. விரிவானதொரு வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ள இந்த அரண்மனை பல உரிமையாளர்களின் கைகளுக்கு மாறி வந்துள்ளது.

கிளாட் மார்ட்டின் என்பவரால் 1781ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மாளிகை கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. முதலில் நவாப் சாதத் அலி கான் என்பவரால் இது வாங்கப்பட்டது.

பின்னர் நவாப் காஜி உத்தின் ஹைதர் இதனை விரிவுபடுத்தும் பணியை துவங்கியுள்ளார். இருப்பினும் அது அவரது வாரிசான நவாப் நாசிர் உத்தின் ஹைதர் என்பவரால் முடித்து வைக்கப்பட்டது.

இதில் தற்சமயம் CDRI எனப்படும் சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்  இயங்கி வருகிறது. ஆவாத் வம்ச நவாப்களும் அவர்களது அரண்மனைப்பெண்டிரும் வசித்த மாளிகையாக திகழ்ந்த இது 1857 சுதந்திரப்புரட்சியின்போது தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்த  இடமாகவும் இருந்திருக்கிறது.

இந்த வரலாற்று மாளிகையின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக தஹேகானா எனும் அமைப்பு காணப்படுகிறது. இது கோமதி ஆற்றங்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தளமாகும்.

வெயில் காலத்தில் குளுமையாக இருப்பதற்காக இந்த தரையடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனை மாளிகையை பார்த்து ரசிப்பதற்காகவே பல சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்கின்றனர்.

சாமுவேல் பார்ன், தரோகா உப்பாஸ் அலி, ஃபெலிஸ் பீட்டோ மற்றும் தாமஸ் ரஸ்ட் போன்ற பிரசித்தமான புகைப்பட கலைஞர்கள் இந்த அரண்மனைக்கு விஜயம் செய்துள்ளனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed