சௌக் எனும் வளாகம் லக்னோ நகரத்தில் ஒரு முக்கியமான நகர அடையாளங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதன் வரலாறு 18 ம் நூற்றாண்டிலிருந்தே துவங்குகிறது.
இதில் மூன்று முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள் அமைந்துள்ளன. ஷா மீனா எனும் இஸ்லாமிய யோகிக்காக அமைக்கப்பட்டுள்ள கோலே தர்வாஸா எனும் கல்லறை இவற்றில் ஒன்று.
பாஞ்ச் மஹால் எனும் கோட்டை அரண்மனை அடுத்த அம்சமாகும். இதுவே பின்னாளில் 1766ம் ஆண்டில் மச்சி பவன் என்று அழைக்கப்பட ஆரம்பித்தது.
இந்த பெயர் மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதாலாவதாக, இந்த கோட்டையிலுள்ள 26அலங்கார வளைவுகளின் முகப்பில் இரண்டு மீன்களின் உருவங்களின் முத்திரை பொறிக்கப்பட்டிருப்பது சொல்லப்படுகிறது.
இரண்டாவது, இதன் உரிமையாளரான ஷேய்க் என்பவருக்கு முகலாய மன்னரால் மஹி மர்த்திப் அல்லது மீன் கௌரவ விருது வழங்கப்பட்ட நிகழ்வாகும். பொதுவாக இங்கு மீன் ஒரு மங்கலகரமான சின்னமாக கருதுப்படுவது தெரியவருகிறது.
சௌக் வளாகத்தில் இன்றும் மீன் சின்னங்களை காணலாம். கட்டிடங்களில் மட்டுமல்லாமல் அரசாங்க முத்திரைகளிலும் இந்த மீன் சின்னம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தனது விசேஷ அம்சங்களுக்காக பிரபல்யமடைந்துள்ள சௌக் வளாகம் இன்று லக்னோவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக வீற்றிருக்கிறது. இந்த வளாகத்தை சுற்றி பல முக்கியமான கலாச்சார, வரலாற்று மற்றும் வணிக கட்டிடங்கள் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications