Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » கவுன்சில் ஹவுஸ்

கவுன்சில் ஹவுஸ், லக்னோ

59

லக்னோ நகரின் மையப்பகுதியில் விதான் சபா ரோடு எனும் சாலையில் கோமதி ஆற்றங்கரையில் இந்த கவுன்சில் ஹவுஸ் எனும் கட்டிடம் அமைந்துள்ளது. இதில் தற்சமயம் உத்தரபிரதேச மாநிலத்தின் விதான் சபா பவன் இயங்கி வருகிறது.

இது அப்போதைய ஆங்கிலேய ஆட்சியினரால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரை அலாகாபாத் நகரிலிருந்து லக்னோவுக்கு மாற்றியபோது கட்டப்பட்டிருக்கிறது. இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு சர்தார் ஹீரா சிங் மற்றும் ஜேகோப் என்பவர்களால் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான அடிக்கல் சர் ஹர்கோர்ட் பட்லர் என்பவரால் 1922ம் ஆண்டு நாட்டப்பட்டிருக்கிறது. 6 வருடங்களுக்குப்பின் 1928ம் ஆண்டு இதன் கட்டுமானம் முடிவடைந்திருக்கிறது.

லக்னோ நகரத்திலுள்ள முக்கியமான வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாக கவுன்சில் ஹவுஸ் அமைந்திருக்கிறது. எண்கோண வடிவத்தில் மிர்ஜாபூர் கற்களைப்பயன்படுத்தி இந்த அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. அந்நாட்களிலேயே இதனை கட்டுவதற்கு 18 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது.

அரங்குகள் போன்ற கூடங்கள் மற்றும் பிரம்மாண்ட அறைகளை கொண்டிருக்கும் இந்த கட்டிடம் சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் ஏற்றதாக உள்ளது. குமிழ் மாடம் போன்ற உச்சிக்கூரையில் மயில் தோகை விரித்தாற்போன்ற அலங்கார அமைப்புடன் இந்த பழமையான மாளிகை வீற்றிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue