ஆவாத் ராஜ்ஜிய நவாப்பான நசீர் உத் தௌலா ஒரு ஒன்பது அடுக்கு மாளிகையாக – அதாவது ஒரு நௌகண்டாவாக இந்த மாளிகையை உருவாக்க திட்டமிட்டுள்ளார். உலகின் எட்டாவது உயர்ந்த கோபுர மாளிகையாக திகழவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.
பாபிலோன் கோபுரம் மற்றும் பைசாக்கோபுரத்தை விஞ்சியதாக இந்த அமைப்பு புகழ் பெறவேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். எனினும் அவரது ஆசை முழுமையாக நிறைவேறவில்லை.
இந்த கோபுர அமைப்பு அவருக்கு அடுத்து வந்த நவாப் முஹமது அலி ஷாவால் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் ஒன்பது அடுக்குக்கு பதிலாக எட்டு அடுக்குகளை கொண்ட அமைப்பாக அவர் குறைத்தும் நான்கு அடுக்குகளுக்கு மேல் இந்த அமைப்பை அவரால் எழுப்ப முடியாமற்போயிற்று.
பாதிக்கட்டுமானத்திலேயே 1840ம் ஆண்டு அவர் இறந்துபோனார். ஒட்டுமொத்த நகரத்தையும் இந்த கோபுரத்தின் மேலிருந்து பார்க்க வேண்டும் என்பதும் நவாப்பின் ஆசையாக இருந்தது. நவாப்பின் மரணத்திற்கு பின்பு இந்த கட்டுமானம் சிதிலமடைந்து விட்டது.
இருப்பினும் மிஞ்சியிருக்கும் சிதிலத்திலிருந்தே இதன் அப்போதைய பிரம்மாண்டத்தை நம்மால் ஊகிக்க முடிகிறது. ஃபிரெஞ்சு மற்றும் இத்தாலிய பாணிகளை கலந்து கட்டப்பட்டிருக்கும் இந்த சத்கண்டா மாளிகை ஹுசைனாபாத் இமாம்பாராவிற்கு அருகில் உள்ளது.
இதன் வரலாற்றுகால கலையம்சங்கள் இன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. இது அப்போதைய உத்தரப்பிரதேச ஆளுநர் ஜார்ஜ் கௌப்பர் என்பவரை கௌரவிக்கும் விதமாக கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications