மதனப்பள்ளி நகரம் அதன் பட்டுப்புடவைகளுக்காகவும் பிரபலமாக அறியப்படுவதால் பெண்கள் மத்தியில் பிராதன ஷாப்பிங் பகுதியாக திகழ்ந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக நீருகுட்டு பல்லே என்ற இடத்தில் பட்டுப்புடவைகள் நல்ல தரத்திலும், நியாயமான விலையிலும் கிடைப்பதால் மக்கள் கூட்டம் அங்கு கொஞ்சம் அதிகமாகவே காணப்படும். அதோடு இந்தப்பகுதியில் கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட மற்ற பிற துணி வகைகளையும் நீங்கள் வாங்கலாம்.
எனினும் பட்டுப்புடவைகளுக்காக இந்தப் பகுதி பிரத்தியேகமாக அறியப்படுவதால் நாடு முழுவதிமிருந்து ஜவுளிக் கடை வியாபாரிகள் இங்கு வந்து ஏராளமான புடவைகளை அள்ளிச் செல்கின்றனர்.
மேலும் அருகாமை நகரங்களான சென்னை போன்ற பகுதிகளிலிருந்து கல்யாண பட்டெடுக்க பெரும்பாலான மக்கள் மதனப்பள்ளி நகருக்கு வருவதையே விரும்புகின்றனர்.



Click it and Unblock the Notifications