ஐந்து ரதம் அல்லது பஞ்சபாண்ட ரதம் என்று அழைக்கப்படும் இவை ஒற்றைப்பாறையை தேர் போன்ற நுணுக்கத்துடன் செதுக்கி எழுப்பப்பட்ட கோயில் வடிவங்களாகும். கடற்கரைக்கோயிலைப்போன்றே இவையும் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐந்து ரதக்கோயில்களும் தனித்தனி பாறைக்குடைவு அமைப்புகளாக பிரத்யேக வடிவமைப்புகளுடன் காட்சியளிக்கின்றன. இவற்றில் தர்மராஜா ரதக்கோயில் அளவில் பெரியதாகவும் சிற்ப நுணுக்கங்களுடனும் காட்சியளிக்கிறது.
முதலாம் மஹேந்திரவர்மர் மற்றும் அவரது புதல்வராகிய முதலாம் நரசிம்மவர்மர் ஆகியோரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த ரதக்கோயில்களின் நோக்கம் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.



Click it and Unblock the Notifications