கடற்கரை கோயில் எனப்படும் இந்த கலையம்சம் நிரம்பிய புராதனக்கோயில் கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானக்கோயில் ஆகும்.
மகாபலிபுரத்தில் உள்ள முக்கிய கலைச்சின்னங்களில் ஒன்றாக வீற்றிருக்கும் இந்த கோயில் யுனெஸ்கோ அமைப்பினால் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் திராவிட சிற்பக்கலை மரபை பிரதிபலிக்கும் மிக முக்கியமான கோயிலாக பிரசித்தி பெற்றுள்ளது.
சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னதி ஆகியவை இந்த கோயிலில் இடம் பெற்றுள்ளன. சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி துர்க்கை வீற்றிருக்கும் சிலையை இங்கு தரிசிக்கலாம்.
சைவம் வைணவம் போன்ற அனைத்து மரபுகளும் ஒன்றாக இக்கோயிலில் இடம் பெற்றிருப்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும். பல்லவ மன்னர்கள் நடுநிலையான போக்கினை ஆன்மீகரீதியாக கடைப்பிடித்திருப்பது இதன் மூலம் புலனாகிறது.



Click it and Unblock the Notifications