பியாஸ் ஆறு உருவாகும் இடமாக கருதப்படும் இந்த பியாஸ் குண்ட் மணாலியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். ஹிந்து ஐதீகப்படி இது ஒரு முக்கியமான ஆன்மீகத்தலமாக கருதப்படுகிறது.
இந்த தீர்த்தம் வியாச முனிவர் நீராடிய இடமாக சொல்லப்படுகிறது. இந்த குண்டத்தில் நீராடினால் தோல் வியாதிகள் குணமாகும் என்று உள்ளூர் மக்கள் கருதுகின்றனர். இக்லூ போன்ற ஒரு பாறை அமைப்பு இந்த பியாஸ் குண்டத்தை பாதுகாப்பது போல் அமைந்துள்ளது.
இந்த பாறை அமைப்பானது ஃபிரெண்ட்ஷிப் பீக், ஷிட்டிதர் பீக், ஹனுமான் திப்பா பீக் மற்றும் லடாக்கி பீக் போன்ற சிகரங்களை நோக்கிய மலையேற்றத்துக்கான அடிவாரத்தளமாகவும் பயன்படுகிறது.



Click it and Unblock the Notifications