கடல் மட்டத்திலிருந்து 6223 மீ உயரத்தில் உள்ள இந்த இந்த்ராசன் பீக் எனும் மலையுச்சியை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதை லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி பகுதியில் உள்ள பிரசித்தமான டிரக்கிங் பாதையாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த பாதை பயணிகளை பார்வதி ஆறு மற்றும் பியாஸ் ஆற்றின் மத்தியிலுள்ள ஒரு பாலத்தின் வழியே அழைத்துச்செல்கிறது. பிரமிக்கவைக்கும் பனிச்சிகரங்களான அலிரத்தன் பீக், இந்த்ராசன் பீக், பஞ்சரத்தன் பீக் மற்றும் தேவ் திப்பா பீக் போன்றவற்றை இப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.
வழங்கிவரும் உள்ளூர் கதைகளின்படி, ஹிந்து ஐதீகத்தின் தேவர்குல மன்னனான இந்திரன் இந்த மலையில் வசித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சிகரத்தை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதையில் உள்ள சந்திராகனி பாஸ் எனும் ஸ்தலமானது தெய்வங்களும் அவர்தம் துணைவியரும் சந்திக்கும் இடமாகவும் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications