குலு பிரதேசத்தில் இருப்பவற்றிலேயே மிகப்பெரிய கிராமமான இந்த ஜகத்சுக் அந்நாளைய குலு ராஜ்ஜியத்தின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. இங்கு பல ஆன்மீக மையங்கள் உள்ளன.
ஷிகரா பாணியில் கட்டப்பட்டுள்ள ஒரு புராதன சிவன் கோயிலும் இங்குள்ள விசேஷ அம்சங்களில் ஒன்றாகும். தட்டையான பிரமிடு வடிவ கோபுர அமைப்புடன் இக்கோயில் காட்சியளிக்கிறது.
மரக்கூரை அமைப்புடன் கூடிய சந்தியா தேவி கோயில் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது. இந்த கோயில்கள் தவிர ஷர்வாலி தேவி கோயி மற்றும் கௌரிஷங்கர் சன்னதி போன்றவற்றையும் ஜகத்சுக் கிராமத்தில் பார்க்கலாம்.
இந்த கோயில்களுக்குள் உள்ள ஒரு ஒற்றுமையாக இவை யாவுமே திரி-ரத கர்ப்பகிருகம் மற்றும் ஷிகரா எனும் விமானத்தை கொண்டிருக்கின்றன. மேலும், இந்த ஆன்மீக திருக்கோயில்கள் யாவுமே எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.