மணாலியின் உயிரோட்டமாகவும் இருதயமாகவும் விளங்கும் இந்த மால் ரோடு நகரின் அடையாளமாக வீற்றிருக்கிறது. மால் ரோடு பகுதியில் மார்க்கெட் பகுதி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.
இந்த சாலையை ஒட்டி உள்ள கடைகளில் பல ஞாபகார்த்த பொருட்களை வாங்கலாம். குல்லு தொப்பிகள், சால்வைகள் மற்றும் உல்லன் துணிகளை இங்கு வாங்கலாம். ருசியான உள்ளூர் உணவுவகைகளை பரிமாறும் உணவகங்கள் மற்றும் சாலையோர உணவுக்கடைகளும் இந்த சாலையில் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications