ஓல்ட் மணாலி எனப்படும் இந்த அழகிய நகரம் மணாலியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பழைய தங்கும் விடுதிகள், கோயில்கள், மடாலயங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் நிறைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகப்பிரசித்தமாக உள்ளது. மேலும் மணாலிகர் கோட்டை இடிபாடுகள், மனு மஹரிஷி கோயில் போன்றவையும் இந்த நகரத்தின் இதர விசேஷ அம்சங்களாக அமைந்துள்ளன.
மே மாதம் அக்டோபர் வரையிலான மாதங்கள் இந்த நகருக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. சோலங் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் ஹடிம்பா கோயில் ஆகியவை இந்த நகரத்துக்கு அருகிலுள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications