மணாலியில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமான சோலங் பள்ளத்தாக்கு பகுதியில் 300 மீ உயரம் கொண்ட ‘ஸ்கி’ (பனிச்சறுக்கு) மின் தூக்கி வசதி அமைக்கப்பட்டுள்ளது.
‘ஸ்னோ பாயிண்ட்’ என்ற பெயரிலும் பிரசித்தமாக அறியப்படும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி சோலங் கிராமம் மற்றும் பியாஸ் குண்ட் ஸ்தலத்துக்கு இடையே அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இங்கு வருடாந்திரமாக நடத்தப்படும் குளிர்கால பனிச்சறுக்கு (ஸ்கி) திருவிழாவிற்கு ஏராளமான சுற்றுலா ரசிகர்கள் வருகை தருகின்றனர்.
சோலங் பள்ளத்தாக்கு பகுதியில் பனிச்சறுக்கு, பாராகிளைடிங், ஜார்பிங் மற்றும் குதிரை சவாரி போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களில் பயணிகள் ஈடுபடலாம். இந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு மலையுச்சியில் அமைந்துள்ள சிவன் கோயிலும் பயணிகளை கவர்கிறது.



Click it and Unblock the Notifications