டிரெக்கிங் எனப்படும் மலையேற்றம் மணாலியில் உள்ள முக்கியமான சாகச பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெரும்பாலான மலையேற்றப்பாதைகள் ஆப்பிள் தோட்டங்கள், சமவெளிப்பகுதிகள், தூய்மையான ஏரிகள் மற்றும் சிறு கிராமங்கள் வழியே பயணிக்கின்றன.
மணாலி-ஹம்டா பாஸ், பின் பார்வதி பாஸ், சர் பாஸ் மற்றும் சந்திரகனி பாஸ் ஆகியவை முக்கியமான மலையேற்றப்பாதைகளாகும். பியாஸ் குண்ட், பர்லாசாலா, தேவ் திப்பா பேஸ் காம்ப் மற்றும் பல் தால் ஏரி ஆகியவையும் இதர பிரசித்தமான மலையேற்றப்பாதைகளாக அமைந்துள்ளன.
மணாலியிலிருந்து மலானா பள்ளத்தாக்கிற்கு செல்லும் மலையேற்றப்பயணத்துக்கு 7 நாட்களும், சந்திராதள் பயணத்துக்கு 11 நாட்களும் தேவைப்படலாம். அதிக உயரத்திற்கு ஏறக்கூடிய திடம் கொண்டவர்கள் மணாலியிலிருந்து துவங்கி ஷியா காரு, டாப்கோ கோங்க்மோ, பாலு கைரா, சந்திரா தால் லேக் மற்றும் சோட்டா தரா வழியாக செல்லும் பாதையை தேர்ந்தெடுக்கலாம்.
இது படால் லேக், மார்சு, பரலாச்சலா மற்றும் டாப்கோ யோங்மோ ஆகிய இடங்களின் வழியாக செல்கிறது. இந்த மலையேற்றப்பாதை பயணிகளை கடல் மட்டத்திலிருந்து 4800 மீ உயரத்திற்கு அழைத்து செல்கிறது. ஜுன் மாதம் துவங்கி அக்டோபர் வரையிலான மாதங்கள் மலையேற்றத்தில் ஈடுபட ஏற்றவையாக உள்ளன.



Click it and Unblock the Notifications