மண்டி பிரதேசத்தில் உள்ள இந்த பரோட் எனும் இடம் அடர்ந்த தேவதாரு மரக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. 2600மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜோகீந்தர் நகர் ஹைடல் பவர் புராஜெக்ட் இந்த ஸ்தலத்தில்தான் அமைந்துள்ளது.
‘ட்ரௌட்’ வகை மீன்கள் வளர்க்கப்படும் இடமாக உள்ளதால் பயணிகளுக்கு மீன்பிடிக்கும் அனுபவமும் இப்பகுதியில் காத்திருக்கிறது. டிரெக்கிங் எனப்படும் மலையேற்ற சாகசப்பயணங்களுக்கும் இப்பகுதி பிரசித்தமாக அறியப்படுகிறது.
மேலும், மண்டி அரசர்கள் பயன்படுத்திய கோடை வாச மாளிகை மற்றும் பிக்னிக் பயணங்களுக்கேற்ற நர்கு காட்டுயிர் சரணாலயம் போன்றவையும் இந்த ஸ்தலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications