மண்டியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஹிமாசல் தர்ஷன் போட்டோ காலரி அமைந்துள்ளது. இந்த போட்டோ காலரியில் ஹிமாசல பிரதேசத்தின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல முக்கியமான புகைப்படங்களின் சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றில் வரலாற்றுச்சின்னங்கள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், பறவைகள், கோயில்கள், மலைகள், மிருகங்கள், குடிமக்கள் மற்றும் மாநிலத்திற்குரிய சிற்பங்கள் போன்றவற்றின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் பார்வையாளர்களுக்கு ஹிமாசல்பிரதேசம் குறித்த சுருக்கமான காட்சிபூர்வ அறிமுகத்தை அளிக்கின்றன.



Click it and Unblock the Notifications