மண்டவ்கார் அல்லது ஷாதியபாத் என்றழைக்கப்பட்ட மண்டு காலத்தாலும், இயற்கையாலும் பல்வேறு அழிவுகளை சந்தித்தும் வரலாற்றுப் புகழுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இடமாகும். ஓய்வு நாடி அலைபவர்களுக்கு மண்டு ஒரு மிகச்சிறந்த ஓய்வுகாலத்தை அளிக்கும். பாரம்பரியமான மாளவ உணவு வகைளுடன், தால்-பட்டி மற்றும் மல்புவா, மற்றும் மாளவ திருவிழா ஆகியவைகளும் மத்தியப் பிரதேச சுற்றுலா வளர்ச்சித் துறையினரால் மண்டுவில் நடத்தப் படுவதல், உண்மையான விடுமுறைக்காலத்தை தேடும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் ஏற்ற தீர்வாக மண்டு உள்ளது.
மண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்
வரலாற்றின் கதவுகளை நன்றாக திறந்து வைத்து அதனாலேயே செம்மைப்படுத்தப் பட்டிருக்கும் இடமாக மண்டு உள்ளது. இந்த நகரத்தின் சுவர்கள் தர்வாஸா என்ற பெரிய நுழைவாயில்களாகவும், மசூதிகளாகவும் மற்றும் மாளிகைகளாகவும் மாறி நின்று மண்டுவின் சுற்றுலா வளர்ச்சியை வளர்க்கும் இடங்களாகவும் மற்றும் அதன் சீர்மிகு வரலாற்றை வாழ வைக்கும் இடங்களாகவும் உள்ளன.
பிரமிக்க வைக்கும் தர்வாஸாக்கள் என்றழைக்கப்படும் இந்த நினைவுச் சின்ன நகரத்தின் நுழைவாயில் கோட்டை கதவுகளையும், அதன் உள்ளே சிருங்காரமாய் காலத்தை வென்ற காதலை வெளிப்படுத்திக் காத்துக் கொண்டிருக்கும் ரூப்மதி பெவிலியனையும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக காண வேண்டியது அவசியம்.
இந்தியாவின் முதல் மார்பிள் அமைப்பான ஹோசாங்கின் கல்லறை மற்றும் தாஜ் மஹால் உருவாவதற்கு காரணமாக இருந்த அற்புதமான நினைவுச்சின்னம் ஆகியவை மண்டுவில் காண வேண்டிய எளிமையான சுற்றுலா தலங்களாகும்.
வரலாற்றின் பக்கங்களில் மண்டு
மண்டுவில் இன்று அழியாமல் நின்று கொண்டிருக்கும் கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களிலிருந்து மண்டுவை ஆண்ட ஒவ்வொரு அரசரைப் பற்றியும் அறிந்திட முடியும். திலாவர் கான் என்ற ஆப்கானிய அரசரால் ஆளப்பட்டு வந்த சிற்றரசாகவே மண்டு இருந்து வந்துள்ளது.
அவருடைய மகன் ஹோசாங் ஷா என்பவரால் மண்டு பெரிய, புகழ் மிக்க அரசாக வளர்ச்சி பெற்றது. பாஸ் பகதூர் என்ற அரசரை வென்று அக்பருடைய முகலாயப் பேரரசில் இணைக்கப்பட்ட மண்டு, பின்னர் 1732-ம் ஆண்டில் மராத்தியர்களால் வெல்லப்பட்டு அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு வந்தது.
மண்டுவை அடையும் வழிகள்
மண்டு நகரம் சாலை, விமானம் மற்றும் இரயில்வே போக்குவரத்து வசதிகளால் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளதால் எளிதில் அடைந்திட முடியும்.
மண்டுவிற்கு வர சிறந்த காலம்
மண்டுவின் மழைக்காலம் மகிழ்ச்சியான பருவநிலை மற்றும் மிதமான மழைத்துளிகளை கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் இடமாக உள்ளது. எனவே, மழைக்காலத்தில் மண்டுவிற்கு சுற்றுலா வருவது சிறந்த அனுபவத்தைத் தரும்.



Click it and Unblock the Notifications