மங்கனில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சிறு கிராமம் தான் சிங்ஹிக். 5200 அடி உயரத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் இந்த கிராமத்திலிருந்து பிரமிக்கத்தக்க வகையில் காட்சியளிக்கும் கஞ்ஜன்ஜங்கா மற்றும் சினியோட்சு மலை ஆகியவற்றைக் காண முடியும்.
மேலும், இந்த கிராமத்திலிருக்கும் மடாலயமும் மிகவும் புகழ் பெற்றது. மேலும், இந்த இடத்தில் இருக்கும் பல்வேறு மலை ஓடைகளும், வனாந்திர மலைகளும், மலைப் பாதைகளும் இந்த இடத்தை நல்ல சுற்றுலா தலமாக உருவாக்கியுள்ளன.
இங்கிருக்கும் சிங்ஹிக் வியூ பாயிண்ட் என்ற இடத்திலிருந்து தான் கஞ்ஜன்ஜங்கா மலைத்தொடர் மற்றும் சினியோல்சு மலைகளையும் பார்க்க முடியும்.
பசுமையான சுற்றுச்சூழல் மறறும் அமைதியான டீஸ்டா ஆறு பாய்ந்து செல்லும் பாங்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் இந்த இடம் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி அமைதியைத் தேடுபவர்களுக்கு சொர்க்கம் போன்று காட்சியளிக்கிறது.
வடக்கு சிக்கிமில் உள்ள சிங்ஹிக் மற்றுமொரு பிரபலமான சுற்றுலாதலமாகும். இந்த இடத்தின் அழகை சில காலம் அனுபவித்திருக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் இரவில் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications