முகப்பு » சேரும் இடங்கள் » மங்கன் » ஈர்க்கும் இடங்கள்
 • 01சிங்ஹிக்

  சிங்ஹிக்

  மங்கனில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சிறு கிராமம் தான் சிங்ஹிக். 5200 அடி உயரத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் இந்த கிராமத்திலிருந்து பிரமிக்கத்தக்க வகையில் காட்சியளிக்கும் கஞ்ஜன்ஜங்கா மற்றும் சினியோட்சு மலை ஆகியவற்றைக் காண முடியும்.

  மேலும், இந்த கிராமத்திலிருக்கும் மடாலயமும் மிகவும் புகழ் பெற்றது. மேலும், இந்த இடத்தில் இருக்கும் பல்வேறு மலை ஓடைகளும், வனாந்திர மலைகளும், மலைப் பாதைகளும் இந்த இடத்தை நல்ல சுற்றுலா தலமாக உருவாக்கியுள்ளன.

  இங்கிருக்கும் சிங்ஹிக் வியூ பாயிண்ட் என்ற இடத்திலிருந்து தான் கஞ்ஜன்ஜங்கா மலைத்தொடர் மற்றும் சினியோல்சு மலைகளையும் பார்க்க முடியும்.

  பசுமையான சுற்றுச்சூழல் மறறும் அமைதியான டீஸ்டா ஆறு பாய்ந்து செல்லும் பாங்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் இந்த இடம் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி அமைதியைத் தேடுபவர்களுக்கு சொர்க்கம் போன்று காட்சியளிக்கிறது.

  வடக்கு சிக்கிமில் உள்ள சிங்ஹிக் மற்றுமொரு பிரபலமான சுற்றுலாதலமாகும். இந்த இடத்தின் அழகை சில காலம் அனுபவித்திருக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் இரவில் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  + மேலும் படிக்க
 • 02ரோங் லுங்டென் லீ

  ரோங் லுங்டென் லீ

  நம்ப்ரிக்டாங்கில் உள்ள லெப்சா பிரிவினரின் பாரம்பரிய வீட்டைப் போல ரோங் லுங்டென் லீ காட்சியளிக்கிறது. இந்த இடம் மங்கன் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. லெப்சா இனத்தவரின் அரிய தொல்பொருட்கள் இந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

  இந்த வீடு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் கூரைப்பகுதி 'சிறிய பரண்' என்று பொருள் தரும் 'போடோங்' என்று அழைக்கப்படுகிறது.

  பார்வையாளர்களுக்காக மதிப்பு வாய்ந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கும் இடமாக இது உள்ளது. வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும் இந்த வீட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கிறார்கள்.

  கனகா மற்றும் டீஸ்டா ஆகிய இரு நதிகள் கூடுமிடத்தில் நம்ப்ரிக்டாங் அமையப்பெற்றுள்ளது. இந்த இடத்திலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அழகு பாராட்டத்தக்கது.

  + மேலும் படிக்க
 • 03சிரிஜோங்கா யுமா மங்ஹீம்

  சிரிஜோங்கா யுமா மங்ஹீம்

  மேற்கு வங்காளத்தில் மாட்ரத்தின் - சிரிஜோங்கா யுமா மங்ஹீம் போன்றே கட்டிடக்கலை ரீதியாக கட்டப்பட்டிருக்கும் இடம் தான் சிரிஜோங்கா யுமா மங்ஹீம். இது 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது.

  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் மங்கே சங்கராந்தி திருவிழாவின் போது இந்த இடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை வரவழைக்கும்.

  சிக்கிமின் வெப்பமான பருவநிலையை துவக்கி வைக்கும் நிழக்ச்சியாக மங்கே சங்கராந்தி திருவிழா உள்ளது. பைக்ராம் சம்பாட் நாட்காட்டியில் வரும் 10-வது மாதத்தின் முதலாம் நாளில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவை, நேபாளிகளும் கொண்டாடுவார்கள். இந்த புனிதமான நாளில், சிக்கிம் மாநிலம் முழுவதுமே பல்வேறு இடங்களில் பல்வேறு மேளாக்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  + மேலும் படிக்க
 • 04லாப்ராங் மடாலயம்

  லாப்ராங் மடாலயம்

  லாப்ராங் மடாலயம் என்பதற்கு 'லாமாவின் இருப்பிடம்' என்று பொருளாகும். இது 1814-ல் க்யால்ஷே ரிக்ஸிங் கெம்பாவால் துவங்கப்பட்டு 1884-ல் கட்டி முடிக்கப்பட்டது. அவர்கள் திபெத்திய புத்தமதத்தின் நியிங்மாபா பிரிவின் கோட்பாடுகளை பின்பற்றி வந்தார்கள்.

  திபெத்திலுள்ள கோங்புவின் லாட்சன் கெம்பா-விற்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த மடாலயம் கட்டப்பட்டுள்ளது. இவர் சிக்கிமில் புத்தமதத்தை நிறுவியதற்காக அன்புடன் நினைவு கூறப்படுகிறார்.

  வடக்கு சிக்கிம் நெடுஞ்சாலையில் உள்ள போடோங் மடாலயத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இந்த லாப்ராங் மடாலயம் அமைந்துள்ளது. சிக்கிமில் தீயினால் சிதைவுற்று கிடக்கும் பிற மடாலயங்களைப் போல் இல்லமல், இந்த மடாலயம் அதன் உண்மையான வடிவமைப்புடன் காணப்படுகிறது.

  இந்த மடாலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள முரல் சுவரோவியங்களில் பத்மசாம்வரின் ஓவியங்கள் 1022 பாவனைகளில் உள்ளன.

  இந்த மடாலயத்தின் மாடிகளில் உள்ள ஒரு தலை வெட்டி எடுக்கப்பட்ட சிலைக்கு நெக்லெஸ் ஒன்றும் அணிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத துவக்கத்தில் நடக்கும் சாம் வகை ஆட்டங்களுக்காகவும் இந்த மடாலயம் அறியப்படுகிறது.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Feb,Wed
Return On
22 Feb,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
21 Feb,Wed
Check Out
22 Feb,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
21 Feb,Wed
Return On
22 Feb,Thu