குரு ராகவேந்திர சுவாமியின் தீவிர பக்தர் மற்றும் அவருடைய சீடரனுமான ஸ்ரீ அப்பனாச்சார்யா வாழ்ந்த இடமாக பிக்ஷாலயா மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அதோடு ராகவேந்திர சுவாமியும், அப்பனாச்சார்யாவுடன் இந்த பிக்ஷாலயாவில் 13 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
'பிச்சாலி' என்ற பெயராலும் அழைக்கப்படும் பிக்ஷாலயா, மந்த்ராலயம் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இது துங்கபத்ரா நதிக்கரையில் பசுமையின் வனப்பும், அமைதியும் சூழ அமைந்திருப்பதால் தங்கள் அன்றாட அலுப்பு சலுப்பும் மிகுந்த நகரத்து வாழ்க்கையிலிருந்து நிவாரணம் தேடி இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் பிக்ஷாலயாவின் பேரமைதி மிக்க சுற்றுச் சூழல் அமைப்பு தியானம் செய்ய விரும்புவோருக்கு வெகு பொருத்தமான இடமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications