மந்த்ராலயம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான ஆஞ்சநேயரின் விக்ரகம் ஐந்து தலைகளுடன் வித்தியாசமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இவற்றில் ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு கடவுளை குறிக்கும் விதமாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பாங்கு அற்புதமானது. அதாவது கருட பகவான், நரசிம்மர், ஹயாகிரீவர், ஹனுமான் மற்றும் வராஹ மூர்த்தி ஆகிய கடவுளர்களின் தலைகளுடன் இந்த சிலை காணப்படுகிறது.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமி, ராம பிரான் மற்றும் ஆஞ்சநேயரின் தீவிர பக்தர் என்று நம்பப்படுகிறது. ஒரு முறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமி 12 ஆண்டுகள் தொடர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவரின் பக்தியை கண்டு வியந்து போன ஆஞ்சநேயர், ராகவேந்திர சுவாமியை காண்பதற்காக பஞ்சமுகி ஆஞ்சநேயர் வடிவத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.
பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயிலின் சுற்றுப்பகுதிகள் பாறைகளால் சூழப்பட்டிருந்தாலும் அதன் இயற்கையழகு மெய்சிலிர்க்க வைக்கும். மேலும் கோயில் செல்லும் வழியில் இயற்கையாக உருவான பாறைகள் சயன மஞ்சம், தலையணை, புஷ்பக விமானம் போன்ற வடிவங்களில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications