அர்த்துங்கல் பீச் தனிமையின் ஏகாந்தத்தை சுகிக்க விரும்பும் எந்த ஒரு பயணிக்கும் மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்த கடற்கரையில் எல்லையில்லாமல் நீண்டு செல்லும் பனை மரங்களும், கிராப்புற வாழ்க்கையின் சாரத்துடன் கரையோரங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் மீன் பிடி படகுகளும் அர்த்துங்கல் பீச்சை வித்தியாசமான சுற்றுலா தலமாக விளங்கச் செய்து கொண்டிருக்கின்றன.
அர்த்துங்கல் பீச்சுக்கு பகல் 3.30 முதல் 4.30 வரையிலான காலங்களில் நீங்கள் வரும்பட்சத்தில் சூரியனின் கதிர்கள் பட்டு தங்கம் போல தகதகக்கும் மணற்பரப்பின் கவின் கொஞ்சும் தோற்றத்தை கண்டு ரசிக்கலாம்.
அர்த்துங்கல் தேவாலயத்துக்கு வரும் ஏராளமான பக்தர்களின் கூட்டத்தை நீங்கள் அர்த்துங்கல் கடற்கரையிலும் பார்க்கலாம். மேலும் அர்த்துங்கல் பீச் அதன் மீன், இறால், கோழி மற்றும் மாட்டுக்கறி சந்தைக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.



Click it and Unblock the Notifications