அர்த்துங்கல் தேவாலயம் ஆலப்புழா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அர்த்துங்கல் என்ற சிறிய கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு முக்கிய யாத்ரீக மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
போர்த்துகீசியர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அர்த்துங்கல் தேவாலயம், அர்த்துங்கல் செயின்ட் போரேன்'ஸ் தேவாலயம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.
இந்த தேவாலயம் பாதிரியார் ஜாக்கோமா பெனிக்கோவின் நினைவாக மீண்டும் 1638-ஆம் ஆண்டு புத்துப்பித்து கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1647-ஆம் ஆண்டு இத்தாலியின் மிலன் நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட செயின்ட் செபாஸ்டியனின் சிலை இந்த தேவாலயத்தில் நிறுவப்பட்டது.
அர்த்துங்கல் தேவாலயம் ஆலப்புழா நகருக்கு உட்டபட்ட பகுதியில் பாரிஷ் அந்தஸ்து பெற்ற முதல் தேவாலயமாகும். அதோடு ஆலப்புழாவின் முதல் பெசிலிக்காவாகவும், கேரளாவின் ஏழாவது பெசிலிக்காவாகவும் அர்த்துங்கல் தேவாலயம் பிரபலமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications