Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மஷோப்ரா » ஈர்க்கும் இடங்கள் » வைல்ட் ஃப்ளவர் ஹால்

வைல்ட் ஃப்ளவர் ஹால், மஷோப்ரா

14

மஷோப்ராவிலிருந்து 4 கி.மீ தூரத்தில் இந்த பிரசித்தமான  வைல்ட் ஃப்ளவர் ஹால் எனும் சுற்றுலா அம்சம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2498மீ உயரத்தில் அமைந்துள்ள மஹாசு சிகரத்தில் உள்ள இந்த மாளிகை காலனிய ஆட்சியின்போது லார்ட் கிட்சனர் என்பவரின் இருப்பிடமாக இருந்திருக்கிறது.

பசுமையான செடார் மற்றும் பைன் மரங்களால் சூழப்பட்டு ஹிமாலயத்தில் வீற்றிருக்கும் இந்த அற்புத மாளிகையிலிருந்து சுற்றிலுமுள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் ரசிக்கலாம்.

சமீபத்தில் இந்த பாரம்பரிய மாளிகை புதுப்பிக்கப்பட்டு ஒரு சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு சுற்றுலாப்பயணிகள் தங்கி ஓய்வெடுத்து இயற்கை அழகை ரசிக்கலாம்.

இந்த மாளிகையின் உட்புறம் மரச்சட்டங்களை கொண்ட கட்டுமான அமைப்புகள், அலங்காரங்கள்,  தேக்கு மர தரை அமைப்புகள், கையால் நெய்யப்பட்ட தரைவிரிப்புகள் மற்றும் திரைச்சீலைகளை கொண்டுள்ளது.

இந்த ஹோட்டலில் உள்ள உணவகங்கள், திறந்தவெளி நீராவிக்குளியலறைகள் மற்றும் வெந்நீர் நீச்சல் குளம் போன்ற இடங்களிலிருந்து பயணிகள் மஷோப்ரா ஸ்தலத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம். ஆயுர்வேத சிகிச்சை முறைகளை வழங்கும் ‘ஸ்பா’ ஒன்றும் இந்த ஹோட்டல் வளாகத்தில் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon