சார்லோட் அல்லது ஷார்லோட் ஏரி மாத்தேரான் ஸ்தலத்திலேயே உள்ளது. இது மாத்தேரான் ஸ்தலத்தின் முக்கியமான சிற்றுலா பிரதேசமாகும். இந்த ஏரியின் வலப்புறத்தில் பிசார்நாத் கோயில் உள்ளது. இந்த புராதன கோயிலுக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மழைக்காலத்தில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் இந்த ஏரிப்பகுதியிலேயே லூயிசா பாயிண்ட் மற்றும் எக்கோ பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்கள் அமைந்துள்ளன. முக்கியமான சுற்றுலா கேந்திரமான இந்த ஏரிப்பகுதியில் பலவிதமான பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம்.
மாத்தேரான் ஸ்தலத்துக்கு குடிநீர் வழங்கும் நீராதாரமாகவும் இந்த ஏரி பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications