மராத்தா வம்சம் மற்றும் முகலாய வம்ச ஆட்சியை சேர்ந்த இந்த கோட்டை வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. சத்ரபதி சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றியபோது இங்கு புதையல் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாத்தேரான் ஸ்தலத்திலேயே இந்த கோட்டை அமைந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக இக்கோட்டை தற்சமயம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் இன்றும் அதன் பின்னணியில் உள்ள மராத்தா கால உன்னதம் மற்றும் கலையம்சங்களை எடுத்துச் சொல்லும் வகையில் அதன் தோற்றம் உள்ளது.
இந்த கோட்டையின் உச்சியில் ஒரு செயற்கைத்தடாகமும் உள்ளது. சிதிலமடைந்த போதிலும் இங்குள்ள இரண்டு கோபுரங்கள் பயணிகள் சுற்றிப்பார்த்து மகிழும்படியான நிலையில் உள்ளன.



Click it and Unblock the Notifications