Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுரா » வானிலை

மதுரா வானிலை

வட இந்தியாவின் பிற பகுதிகளைப் போன்றே, மதுராவிலும் வானிலை மிக ரம்மியமாக இருக்கக்கூடிய காலகட்டமான நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலமே மதுரா செல்வதற்கான உகந்த காலமாகும். ஆயினும், ஏராளமான கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் வருடந்தோறும் இங்கு நடைபெறுகின்றன. மார்ச் மாதம் வரும் ஹோலிப் பண்டிகை மற்றும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வரும் ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகளின் போது, மதுரா மிகவும் உயிர்ப்புடன் காணப்படும். அதனால், மதுரா நகரம் ஆண்டின் எந்த பகுதியிலும் சென்று வரக்கூடிய ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.                       

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்கள் தாங்கவியலாத வெம்மையுடன் சுமார் 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடிய வெப்ப நிலையுடன் காணப்படும். இது மட்டுமின்றி, இச்சமயத்தில் இங்கு வீசக்கூடிய வெப்பக் காற்றானது இக்கோடை நாட்களை மேலும் கடுமையானவையாக ஆக்குகின்றது.

மழைக்காலம்

இந்நகரம் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மழைப்பொழிவைப் பெறுகின்றது. இம்மழை, வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தாலும் ஈரப்பதத்திற்கு கட்டியம் கூறுகின்றது.

குளிர்காலம்

குளிர்காலம் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இக்காலகட்டத்தில், பகல் பொழுதுகள் இதமானவையாகவும், இரவுப் பொழுதுகள் குளிருடனும் காணப்படுகின்றன. வெப்பநிலை 12 டிகிரி மற்றும் 25 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்ட அளவில் இருக்கும்.