Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மான் » ஈர்க்கும் இடங்கள் » ஷன்கின்யு கிராமம்

ஷன்கின்யு கிராமம், மான்

7

மான் மாவட்டத்தின் மிக முக்கியமான பாரம்பரியம் கொண்ட கிராமமாக ஷன்கின்யு விளங்குகிறது. கன்யாக் மக்களின் ஆட்சியாளர்களான ஆங்கின் தலைவரால் இந்த கிராமம் நிர்வாகம் செய்யப்படுகிறது.

இந்த கிராமத்தின் தலைவரின் வீடு இந்த கிராமத்தின் மிக முக்கிய தலமாக இருக்கிறது. அதாவது அவருடைய வீடு முழுவதும் மரத்தால் செய்யப்பட்டு, மர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இந்த வீட்டின் நுழைவு வாயில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

இந்த வீடு வானத்து தேவர்களால் கட்டப்பட்டதாக, இந்த பகுதியில் ஒரு நம்பிக்கை உண்டு. இந்த வீடு 8 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த இல்லம் சுமார் 500 - 600 ஆண்டுகளுக்கு முன்பு உலோக காலத்தின் போது கட்டப்பட்டதாக இந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இந்த வீட்டின் அமைப்பு மனித வடிவங்கள் மற்றும் மற்ற உயிரினங்களின் வடிவங்களையும் கொண்டிருக்கிறது. ஆங்கின் தலைவருடைய அரண்மனையாகக் கருதப்படும் இந்த இல்லத்தின் முற்றத்தில் ஒரு மிகப் பெரிய நினைவு கல்தூண் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது அஸ்ஸாம் என்று கருதப்படும் பகுதியில் ஆட்சி புரிந்த அஹோம் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் ஷன்கின்யு கிராமத்தின் ஆங்கிஸ்கள் வாழந்ததாக வரலாறு கூறுகிறது. ஷன்கின்யு கிராமத்தில் கன்யாக் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri