படே ஹனுமான் ஜி கோயில் சந்தௌசி நகரத்தில் ஹனுமான்காரி எனும் இடத்தில் உள்ளது. இது இப்பகுதியில் உள்ள பெயர் பெற்ற பழமையான கோயில்களில் ஒன்றாகும். இதில் ஹனுமான் சிலை காணப்படுகிறது.
ஹனுமான்காரியில் உள்ள சீதா ஆஷ்ரம் மைதானத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இக்கோயில் 400 வருடங்கள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு சிறிய குன்றின் உச்சியில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஹனுமான் சிலைக்கு கீழே ஒரு குகை ஒன்றும் காணப்படுகிறது. இந்த தரையடிக்குகை நகரம் முழுக்க நீண்டிருப்பதாக உள்ளூர் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
புராணக்கதைகளின்படி, இந்த ஸ்தலத்தில்தான் ஹனுமான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. சுயம்புவாக அவர் இந்த இடத்தில் தோன்றியதாக கதைகள் கூறப்படுகின்றன. எனவே அவருக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.
இதே கோயிலில் ராமர் மற்றும் அவரது குடும்பத்தார் சிலைகளும் காணப்படுகின்றன. மேலும், கிருஷ்ணர் குடும்பத்தார் மற்றும் சிவபெருமான் குடும்பத்தார் சிலைகளும் இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தவிர துர்க்கையம்மன் சிலை, பாய்ராவ், சாய்பாபா போன்ற யோகிகளின் சிலை போன்றவற்றையும் இக்கோயிலில் பார்க்கலாம். பக்தர்கள் மத்தியில் இந்த படே ஹனுமான் ஜி கோயில் மிக பிரசித்தமாக அறியப்படுகிறது.