மும்பையின் மற்றுமொரு புகழ்பெற்ற இடம் பேண்ட்ஸ்டாண்ட். இந்தப் பகுதியில் உள்ள கடைகளில் நீங்கள் பருகும் காப்பியும், தேநீரும் என்றென்றைக்கும் உங்கள் அடி நாக்கில் தித்தித்துக் கொண்டே இருக்கும்.
இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் ஷாருக் கானின் 'மன்னத்' இல்லமும், சல்மான் கான் வசித்து வரும் கேலக்ஸி டவர் அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கிறது.
மேலும், பேண்ட்ஸ்டாண்ட் பகுதி காதலர்களின் மையமாகவும் அறியப்படுகிறது. எனவே இந்த இடத்துக்கு நீங்கள் வரும் சமயம் எண்ணற்ற காதல் ஜோடிகள் இங்குமங்கும் உலாவிக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications