இந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகமானது கொலாபா காஸ்வேயில் தான். இங்கு தெருவோரக் கடைகள் மட்டுமல்ல, பிரபல பிராண்டுகளின் ஷோ ரூம்களும் இருக்கின்றன.
இந்தப் பகுதி கேட்வே ஆஃப் இந்தியா, விக்டோரியா டெர்மினஸ், ரீகல் சினிமா மற்றும் லியோபோல்ட் கஃபே போன்ற மும்பையின் முக்கிய அடையாளங்களுக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கிறது.கொலாபா காஸ்வே வரும் பயணிகள் கால் நடையாக ஷாப்பிங் செல்வதே சிறந்தது. குறிப்பாக பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு பல வகைகளில் கிடைக்கும்.
மேலும், மும்பையின் பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருட்களெல்லாம் கொலாபா காஸ்வயிலிருந்தே மொத்தக் கொள்முதலில் வாங்கப்படுவதாக சொல்லபடுகிறது. எனவே எதற்காக அதிக விலைக்கு பொருட்களை வாங்க வேண்டும்?!