கேட்வே ஆஃப் இந்தியா, மும்பை

மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா. இந்தக் கட்டிடம் ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டிடக் கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு எழுப்பப்பட்டுள்ளது.

மும்பை வரும் பயணிகள் கேட் வே ஆஃப் இந்தியா வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் அவர்களின் பயணம் முற்றுப் பெற்றதாக அர்த்தம். மேலும், கொலாபா காஸ்வே, பேட் மியாஸ் மற்றும் புகழ்பெற்ற கஃபே லியோபோல்ட் போன்ற மும்பையின் மற்ற அடையாளங்களும் கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில்தான் இருக்கின்றன.

Please Wait while comments are loading...