ஹாஹா பஞ்ச்குமாரி, கராக்பூர் அணையின் மேல் அமைந்துள்ள ஒரு வசீகரமான நீர்வீழ்ச்சியாகும். புராணக் கதைகளின் படி, கராக்பூர் மன்னர் தில்லி சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அதனால் அவரது ஐந்து மகள்களும் கராக்பூர் மலைகளில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறப்படுகிறது.
அதிலிருந்து இந்த நீர்வீழ்ச்சி இங்கு வாழ்ந்த அந்த ஐந்து இளவரசிகளையும் நினைவு கூரும் விதமாக பஞ்ச்குமாரி என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் கராக்பூரிலிருந்து ஒரு வாடகைப் படகு மூலம் இங்கு வந்தடைந்து இந்த நீரூற்றுகளின் அழகையும் குளிர்ச்சியையும் அனுபவித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications