முங்கரின் வசீகரமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான முங்கர் கோட்டை கட்டப்பட்ட தேதி துல்லியமாக தெரியாவிட்டாலும், இது அடிமை ராஜ்ஜியத்தின் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோட்டை இரு பிரபலமான மலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒன்று கர்ணசௌரா என்று அழைக்கப்படுகிறது. ஒரு நீள்சதுர குன்றின் மேல் அமைந்துள்ள மற்றொன்று, ஏறத்தாழ ஒரு கோட்டையின் வடிவில் காணப்படுகிறது. இது பழங்காலத்தில் மக்கள் கூடும் மிக முக்கியமான மையமாகத் திகழ்ந்திருக்கிறது.
இக்கோட்டை கடலில் எழும்பும் அலைகளைப் போல் துக்ளக்கள், கில்ஜிக்கள், லோதிக்கள், வங்காள நவாப்கள், முகலாய ஆட்சியாளர்கள், கடைசியாக ஆங்கிலேயப் பேரரசு போன்ற ஏராளமான ஆட்சியாளர்களைக் கண்டுள்ளது. இது இக்கோட்டையின் ஆன்மாவின் மேல் நீங்காத பல நினைவுகளைப் படியச் செய்துள்ளது.
இக்கோட்டை பல்வேறு முக்கிய ஆன்மீக மற்றும் வரலாற்று நினைவகங்களான பீர் ஷா நுஃபா மற்றும் முல்லா முஹமது சயீத்தின் கல்லறை போன்றவற்றின் உறைவிடமாகத் திகழ்வதிலேயே அதன் அழகு அடங்கியுள்ளது.



Click it and Unblock the Notifications