1177 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள பீர் ஷா நஃபா வழிபாட்டு மையம், முங்கர் கோட்டையின் தெற்குப்புற நுழைவுவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த கல்லறை, பெர்ஷியாவிலிருந்து வந்து, பின்னர் அஜ்மரின் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியினால் முங்கருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சூஃபி துறவி ஒருவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த குவிமாடம் கொண்ட கல்லறை சுமார் 16 அடி உயரத்துடனும், வட்ட வடிவமான ஸ்தூபிகளுடனும் காணப்படுகிறது. இங்கு ஒரு ஓய்வறையும், வழிபாட்டு அறையும் கூட காணப்படுகின்றன.
சூஃபி துறவியை கௌரவிக்கும் பொருட்டு இந்த இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் தேதியில் ஒரு இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications