முர்ஷிடபாத்திலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது ஹசார்டுவாரி அரண்மனை. இந்த அரண்மனையின் பெயருக்கு ஆயிரம் கதவுகள் என்ற அர்த்தமாகும். இங்கே ஆயிரம் கதவுகள் இருப்பதாலேயே இது இப்பெயரை பெற்றது.
இந்த வெண்ணிற அரண்மனை அதன் பிரம்மாண்டத்துக்காகவே புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் இது நகரத்தின் அழகையே அதிகரிக்கும். இந்த அரண்மனையின் முன்னாள் உள்ள புற்தரை 2 கால்பந்து மைதானம் அளவிற்கு பெரியதாக இருக்கும்.
இதுவும் கூட இந்த அரண்மனையின் கம்பீரத்தை அதிகரிக்கிறது. காலனி வடிவமைப்பில் பிரம்மாண்டமாக உள்ள இந்த அரண்மனையில் மதிய நேரத்தை போக்க இதமானதாக இருக்கும்.
இந்த அரண்மனையில் பல வகையான கட்டமைப்புகள், சிற்பங்கள் மற்றும் சிறு கோபுரங்களை காணலாம். 1829-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனையை பாதுகாக்க இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பெரிதும் பாடுபடுகிறது. இப்போது இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications