நாட்டார் கலை அருங்காட்சியகம், மைசூர்

முகப்பு » சேரும் இடங்கள் » மைசூர் » ஈர்க்கும் இடங்கள் » நாட்டார் கலை அருங்காட்சியகம்

சுற்றுலாப் பயணிகள் தவறாமல் காண வேண்டிய இடங்களில் ஒன்று இந்த நாட்டார் கலை அருங்காட்சியம் ஆகும். இது மைசூரில் ஜயலட்சுமி விலாஸ் என்று அழைக்கப்படும் புராதன மாளிகையில் அமைந்துள்ளது.

1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 6500 நாட்டார் கலை சம்பந்த பட்ட கலைப்பொருட்களும் கருவிகளும் தோல்பாவை பொம்மைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய பாரம்பரிய விளையாட்டு பொம்மைகள், வீட்டு உபயோக கருவிகள் போன்ற பொருட்களும் தென்னிந்தியாவின் பண்பாட்டு பாரம்பரியத்துக்கு ஆவணச் சான்றாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி இந்த அருங்காட்சியகத்தில் நடனம், நாடம், இசை  போன்ற கலை வடிவங்களோடு தொடர்புடைய இதர கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.இந்த அருங்காட்சியம் வகைப்படுத்தப்பட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பொம்மைப் பிரிவு, நாட்டார்கலை, இலக்கியம், கலை மற்று நாட்டுப்புற வாழ்வியல் என்ற பல பிரிவுகளின் அடிப்படையில் அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

பொம்மைப் பிரிவில் பல்வேறு அளவுகளில் தாலேபூதா, காய்பூதா, மாரி, சோமா மற்றும் கடி மாரி போன்ற நாட்டுப்புற ஆட்டங்களில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.  நாட்டார் வாழ்வியல் பிரிவில் மீனவ மக்கள், குயவர்கள், படகோட்டிகள், தச்சர்கள், கொல்லர்கள், விவசாயிகள், காலணித்தொழிலாளர்கள் மற்றும் இதர தொழில் கலைஞர்கள் போன்ற பலதரப்பட்ட தொழில் பிரிவினர் அவர்தம் தொழில் சார்ந்து பயன்படுத்திய கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர இதே பிரிவில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய தற்காப்பு ஆயுதங்கள், விளக்குகள், சமையல் சாதனங்கள், விவசாய கருவிகள், தானிய களஞ்சியங்கள், பானைகள், மணிகள் மற்றும் கூடைகளும் இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.நாட்டார்கலைப் பிரிவில் யக்‌ஷகானம், கதகளி போன்ற நாட்டிய நாடக கலை தொடர்பான உடைகள் வைக்கப்பட்டுள்ளன. 

இது தவிர ஆந்திர கூத்து வடிவம் தொடர்பான பொருட்களும் ஒரு ஹனுமானும் கிரீடமும் இங்கு உள்ளது.சுற்றுலாப் பயணிகள் இந்த மியூசியத்தை திங்கள் முதல் சனிக்கிழமை வரை 10 மணியிலிருந்து 5 மணி வரை பார்க்கலாம். இந்த மியூசியம் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையில் மூடியிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Please Wait while comments are loading...