நாகப்பட்டினத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சுப்ரமணியசுவாமிக்காகக் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் மயிலுக்கு அருகில் சுவாமி நிற்பது போன்ற மிக அழகிய சிலை உள்ளது.
இந்த சிலையைச் செதுக்கிய சிற்பியைப் பாராட்டி, அரசன் பொன்னும் பொருளும் பரிசளித்ததாகவும், அதே நேரத்தில் இதுபோன்ற சிலையை அந்த சிற்பி செதுக்கவே கூடாது என்று அவரது கட்டைவிரலை துண்டித்துவிட்டதாகவும், செவி வழி வந்த செய்திகள் கூறுகின்றன.



Click it and Unblock the Notifications