நாகர்ஹொளே தேசியப் பூங்கா 1955-ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இதன் பரப்பளவை 643 சதுர கிலோமீட்டர் அளவுக்கு அதிகரித்து, 1988-ஆம் ஆண்டு இதை தேசிய பூங்காவாக தரம் உயர்த்தினர்.
அதுமட்டுமால்லாமல் இது 1999-ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு காடுகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஆதி காலத்திலிருந்தே வனவிலங்குகளுக்காக பிரபலமாக இருந்து வருகிறது. அந்த காலங்களில் மைசூர் மகாராஜாக்கள் இங்கு காட்டெருமைகள் உள்ளிட்ட மிருகங்களை வேட்டை ஆடி வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
நாகர்ஹொளே தேசியப் பூங்கா பல்வேறு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்கு வரும் பயணிகள் தேனுண்ணுங் கரடி, கருஞ்சிறுத்தை, நான்கு கொம்புகள் உடைய இரலை மான்கள், காட்டுப் பன்றி, எறும்புதிண்ணி, காட்டெருமை, புலிகள் உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.
அதோடு இங்கு மலைப்பாம்பு, முதலை, விரியன் பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் எண்ணற்ற பறவை இனங்களையும் நீங்கள் இங்கு காணலாம்.



Click it and Unblock the Notifications